
எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியில் பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சஞ்சீவன், அதிகமான சேவைகளை ஆற்றி வருகிறார்.
இன பாகுபாடுயின்றி இந்த தொகுதி மக்களுக்கு சமூக சேவைகளை ஆற்றி வரும் பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான இவர், எதிர் வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெராம் பாடாங் தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாக தெரிகிறது.
நாளை ஜூலை 18 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் வேட்பு மனு தாக்கல் தினமாகும்.
இதனிடையே இந்த தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளராக அம்னோவை சேர்ந்த ஒருவர் போட்டிருக்கிறார்.


