Thursday, July 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலாய்க்காரர்களின் அரசியல் ஒற்றுமையில் மட்டுமே மகாதீரின் அக்கறையா?

அன்மைய ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவு மலாய்காரர்களின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிப்பாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் அறிக்கை இனவாத செயல் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
இந்நாட்டின் மூத்த அரசியல்வாதி மற்றும் தேசியவாதி என கருதப்படும் இவர் ஒரு இனவாதியாக செயல் பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் மலாய்காரர்கள் சமூகத்தின் ஒற்றுமையைப் பற்றி அண்மை காலமாக வலியுறுத்தி வரும் இவர், இந்தியர் மற்றும் சீனர் சமூகத்தின் ஆதரவு இல்லாமல் 22 ஆண்டு மற்றும் 22 மாதம் இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகித்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தமது அரசியல் லாபத்திற்காக மிக கேவலமான அநாகரீக அரசிலை மகாதீர் நடத்தி வருகிறார் என்றார் அவர்.
இந்நாட்டில் சீன மற்றும் இந்திய சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் அரசியல் பிழைப்பை இவர் நடத்தி வந்திருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
தமது மற்றும் தம் பிள்ளைகளின் ஊழலை மறைக்க இந்நாட்டின் தேசியவாதிப் போல் நாடகம் நடித்து வருகிறார் என்றார் அவர்.
ஜொகூர் பாரு தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி, நெகிரி செம்பிலான் தேர்தலை ஒரு அளவுகோலாக கூறும் இவரின் கூற்று முட்டாள் தனமானது என்றார் அவர்.
மலாய் காரர் அல்லாதவர்களின் ஆதரவு இல்லாமல், இந்த முன்னாள் பிரதமர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மகாதீர் தமது தரத்தை இறங்கி மிகக் கேவலமான அரசியலை நடத்தி வருவது மிகவும் வருத்தமான செயல் என்றார் அவர்.அன்மைய ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவு மலாய்காரர்களின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிப்பாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் அறிக்கை இனவாத செயல் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
இந்நாட்டின் மூத்த அரசியல்வாதி மற்றும் தேசியவாதி என கருதப்படும் இவர் ஒரு இனவாதியாக செயல் பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் மலாய்காரர்கள் சமூகத்தின் ஒற்றுமையைப் பற்றி அண்மை காலமாக வலியுறுத்தி வரும் இவர், இந்தியர் மற்றும் சீனர் சமூகத்தின் ஆதரவு இல்லாமல் 22 ஆண்டு மற்றும் 22 மாதம் இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகித்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தமது அரசியல் லாபத்திற்காக மிக கேவலமான அநாகரீக அரசிலை மகாதீர் நடத்தி வருகிறார் என்றார் அவர்.
இந்நாட்டில் சீன மற்றும் இந்திய சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் அரசியல் பிழைப்பை இவர் நடத்தி வந்திருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
தமது மற்றும் தம் பிள்ளைகளின் ஊழலை மறைக்க இந்நாட்டின் தேசியவாதிப் போல் நாடகம் நடித்து வருகிறார் என்றார் அவர்.
ஜொகூர் பாரு தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி, நெகிரி செம்பிலான் தேர்தலை ஒரு அளவுகோலாக கூறும் இவரின் கூற்று முட்டாள் தனமானது என்றார் அவர்.
மலாய் காரர் அல்லாதவர்களின் ஆதரவு இல்லாமல், இந்த முன்னாள் பிரதமர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மகாதீர் தமது தரத்தை இறங்கி மிகக் கேவலமான அரசியலை நடத்தி வருவது மிகவும் வருத்தமான செயல் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular