
கோலாலம்பூர் செப் 21
நாட்டில் உள்ள தனியார் டியூஷன் மையங்கள் நடத்துபவர்கள் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவை கல்வி அமைச்சு மறுபரிசலனை செய்ய வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.
எதிர் வரும் 2027 முதல் இந்த நிபந்தனை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட டியூஷன் நிலையங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்ற கல்வி அமைச்சின் முடிவு கடுமையானது என்றார் அவர்.
பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் டியூஷன் நிலையங்கள் இந்த நிபந்தனைக்கு உட்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
நடப்பில் உள்ள டிவிஷன் நிலையங்களின் உரிமையாளர்கள் பதிவை புதுப்பிக்க 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமையை வழங்கினால், இவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை கல்வி அமைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர்.
மடானி அரசாங்கம் ஏன் திடீரென இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள பூமிபுத்ராக்களின் வர்த்தக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில் ஏன் இப்போது இந்த புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
பூமிபுத்ராக்களின் வர்த்தக வாய்ப்புகளுக்கு அரசாங்கம் அதிக உதவியை வழங்கி வருகிறது.
ஆகையால் அரசாங்கத்தின் இந்த புதிய நடைமுறை தேவையற்ற ஒன்று என அவர் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சு ஒரு பரிந்துரையை செய்யும் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ பாட்லினா கூறியுள்ளார்.


