Wednesday, July 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ரவூப் ஆலய கொண்டாட்டத்தில் 7 தங்க சங்கிலிகள் கொள்ளை – போலீஸ் தீவிர விசாரணை

நேற்று முன்தினம் நடைபெற்ற ரவூப் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேக கொண்டாட்டத்தின் போது திருட்டு கும்பல் ஒன்றால் 7 பெண்மணிகளின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 5,000 பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் 7 பெண்மணிகளின் தங்கச் சங்கிலிகளை இந்தக் கும்பல் களவாடி சென்றதாக ரவூப் மாவட்ட தலைமை போலீஸ் முகமட் ஷாரில் கூறினார்.
தங்கச் சங்கிலிகளை அணிந்து வரும் பெண்மணிகளை அடையாளம் கண்டு ஒரு திருட்டு கும்பல் இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆலய கொண்டாட்டத்தின் நெரிசல் நேரத்தில் இந்த கும்பல் தங்களின் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நேரிசல் நேரத்தில் சங்கிலியை துண்டிக்கும் கருவியை கொண்டு கொள்ளை சம்பவத்தில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதத்தில் சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் நடந்த ஆலய திருவிழா கொண்டாட்டங்களில் இதே பாணியில் ஒரு கும்பல் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் இது போன்ற ஆலய கொண்டாட்டங்களில் தங்க நகைகள் அணிவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular