
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில 16 ஆவது சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இங்குள்ள பெல்டா பாலோங் 1-ல் பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இங்குள்ள மக்கள் எதிர் நோக்கம் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்து நிலைமையை நேரில் கண்டறிந்தார்.
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைத்தல் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான அவர் சொன்னார்.

நடப்பு மாநில அரசாங்கம் மக்கள் எதிர் நோக்கம் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்க தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் தாங்கள் எதிர் நோக்கி வரும் அடிப்படை பிரச்சனைகளை இவட்டார மக்கள் இவரிடம் முன் வைத்தனர்.
இவ்வட்டார மக்களின் கோரிக்கைகளை கூட்டணியின் தலைமைத்துவத்திடம் தாம் கொண்டு செல்ல போவதாக அவர் உறுதியளித்தார்.
அதே வேளையில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு வழங்கப்படுகிறது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான அவர் உறுதியளித்தார்.


