Sunday, July 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புக்கிட் பாத்து தொகுதியை கைப்பற்ற மஇகா கடுமையான பிரச்சாரம்!

வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புக்கிட் பாத்து தொகுதியை கைப்பற்ற மஇகா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மஇகா உதவி தலைவர் டத்தோ டி. முருகையா தலைமையில் தேர்தல் பிரச்சாரம் மும்முறமாக நடந்து வருகிறது.
தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் மஇகா வேட்பாளராக இந்த தொகுதியில் குமரன் போட்டியிடுகிறார்.
மஇகா தேர்தல் பணிக்குழு வீட்டுக்கு வீடு, உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறது.
இதனிடையே கடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மஇகா 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், இந்த தேர்தலில் புக்கிட் பாத்து தொகுதியை மஇகா கைப்பற்றும் என கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவு பெருகி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


அதே வேளையில் தேசிய முன்னணி பங்காளி கட்சிகளும் இந்த தொகுதியில் கட்சியின் வெற்றிக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
16 ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நான்கு தொகுதிகளையும் கட்சி கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே புக்கிட் பாத்து தொகுதி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மஇகா கூலாய் கிளைத் தலைவருடன் மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தலைமையில் ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.
அடையாளம் காணப்பட்டுள்ள 4,187 வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொள்வது மற்றும் அணுகுவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டது.


மேலும் அடிபட்ட உறுப்பினர்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும் நடைமுறைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
இந்த சந்திப்பில் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம்,, டத்தோ எம்எம் சாமி,கூலாய் கிளைத் தலைவர் டத்தோ சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular