
மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் தனது விமான சேவை பல அமைப்பு விரிவுபடுத்தும் வகையில் நான்கு புதிய விமான நிறுவனங்களுடன் ஏர் ஆசியா மூவ் பங்காளித்துவ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.
ஓமான் ஏர், உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ், பிட்ஸஏர் மற்றும் ஹைனான் ஏர்லைன்ஸ் ஏர் ஆசியா மூவ் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டது.
‘2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக அறிவிக்கப்பட்ட இந்த கூட்டாண்மைகள், பயணிகளுக்கு கூடுதல் விமான விருப்பங்களையும், வளர்ந்து வரும் இடங்களுக்கு இந்த தளத்தின் மூலமாக சிறந்த அணுகளையும் வழங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.’
ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பயண தெரிவுகளை வழங்கும் அதே வேளையில், விமான பயணிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆன்லைன் பயண முகமையாக தன் நிலையை வலுப்படுத்துவதற்காக அதன் பரந்து உத்தியின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமைகிறது என அந்த நிறுவனம் கூறியது.
இதனிடையே இந்த புதிய சேர்க்கைகள் பிராந்தியத்தில் உள்ள பயணிகளை சென்றடைவதற்கான ஒரு விநியோக வழிதடமாக இந்த தளத்தின் மீது விமான நிறுவனங்களுக்கு உள்ள வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன என ஏர் ஆசியா மூவ்
(ஏர் ஆசியா மூவ்) தலைமை நிர்வாக அதிகாரி நடியா உமர் கூறினார்.
ஓமான் ஏர், உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ், பிட்ஸஏர் மற்றும் ஹைனான் ஏர்லைன்ஸ் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கயை பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மூவ்(MOVE) சுற்றுச்சூழல் அமைப்பின் வலிமையையும், எங்கள் விமான பங்காளிகளுக்கு நாங்கள் வழங்கும் பிராந்திய ரீதியிலான அணுகளையும் இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் பயணிகளுக்கு பல புதிய பயனைப் பாதைகளை இந்த கூட்டாண்மைகள் உருவாக்கும் ஏன் அவர் சுட்டிக் காட்டினார்.
ஓமான் ஏர் நிறுவனம் ஒமானுக்கும் அதன் சர்வதேச வலைப்பின்னலில் உள்ள இடங்களுக்கும் இணைப்பை வழங்கும், அதே வேளையில் உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் தாஷ்கணில் உள்ள தனது மையத்தின் மூலம் மத்திய ஆசிய வழித்தடங்களுக்கான அணுக்களை வழங்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கொழும்பு மற்றும் கோலாலம்பூர் இடையிலான விமான தொடர்பை பிட்ஸ்ஏர் நிறுவனம் மேம்படுத்த உள்ளத்துடன், அங்கிருந்து லாகூர், துபாய், டாக்கா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கான தொடர்பு விமான சேவைகளையும் வழங்க உள்ளது.
ஹைனான் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை ஹைக்கூ,சோங்கிங்,
சென்சென் மற்றும் ஷியான் போன்ற முக்கிய சீன நகரங்களுக்கும், அத்துடன் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள பிற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது.
சமீபத்திய செயற்கைகளுடன் ஏர் ஆசியா மூவ் நிறுவனம் இப்பொழுது உலக அளவில் 79 விமான நிறுவனங்களுடன் நேரடி கூட்டாண்மைகளை கொண்டுள்ளது.
அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் 700 கூடுதல் விமான நிறுவனங்களை அணுகும் வசதியும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


