Tuesday, June 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாகாவ் Helier farm மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சஞ்சீவன் கேட்டறிந்தார்

இங்குள்ள ‘டத்தோ ஆலயத்திற்கு’ வருகை புரிந்த பெரிக்காத்தான் நேஷனல் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளரான டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன், ஆலயத்திற்கு வருகை புரிந்த வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்.
ஆலயத்தின் வழிபாட்டில் கலந்து கொண்ட பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான அவர், இவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த வட்டார மக்களுடன் மகிழ்ச்சியாக தாம் கலந்துரையாடியதாக பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான அவர் சொன்னார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அரசியல் கட்சி தலைவர்கள் தான் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்றார் அவர்.
இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்தால் மட்டும் போதாது, மக்கள் இரு நோக்கம் பிரச்சினைகளை முதலில் கண்டறிய வேண்டும் என்றார் அவர்.
ஆகையால் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் இம்மாநில வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சி கூட்டணியாக இருந்த போதிலும், மக்களின் நலன்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சஞ்சீவன் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular