
விரைவில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பெர்சாத்து கட்சி தயார் நிலையில் இருப்பதாக அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்த தேர்தலை எதிர் நோக்க கட்சியின் தலைமைத்துவம் வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலை குறித்து இங்கு நடந்த கட்சியின் தலைமைத்துவ கூட்டத்திற்கு பிறகு அவர் பேசினார்.
கட்சியின் தேர்தல் இயந்திரத்தை தயார்படுத்தவும் மற்றும் வியூக திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் மாநில தேர்தலில் இங்குள்ள மக்கள் தங்களுக்கு வற்றாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


