Monday, June 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இமயம் சரிந்ததோ!

ஓ எங்கள் பாரதிராஜாவே
தமிழ் மக்களின் இதயரோஜாவே…

தமிழினத்தின் மகாராஜாவே
தமிழ் சினிமாவின்
மந்திரக்கோலே…,

எம் தமிழ் மக்களை
“என் இனிய தமிழ் மக்களே”
என விளித்த
முதல்
வரலாற்றுத் தமிழனே
தலைவனே…..

கருத்தம்மா தந்த
கருப்புத் தமிழனே
காதல் ஓவியம் தந்த
காவியக் கவைஞனே….

பாலுத் தேவர் பாத்திரம்
சாதிச் சனியன்களுக்கு
நீ படைத்த சாத்திரம்
அது சாட்டையடி மட்டுமல்ல
அது மரண அடையும் கூட…

“கண்களால் கைது செய்”
எனச் சொல்லி
ஒட்டு மொத்தத்
தமிழ் மக்களையும்
உன்னுள்
சிறை பிடித்துவிட்டாயே.

நீ ஏன் உன் விழிகளை
மூடிக் கொண்டாய்…
தமிழன் கண் விழிக்கவில்லை
என்பதாலா….?

காமிராவின் கண்களுக்குள்
நீ புகுத்த வேண்டிய
அற்புதங்களும்,
அதிசயங்களும்,
இன்னும்
மிச்சம் இருக்கின்றனவே…

நீ கட்டிலில் படுத்து
குணமடைகிறாய்
என்றெண்ணியிருந்தோம்
ஆனால்
பிரிந்தவிடுவாய்
என நினைத்துக்
கூடப்
பார்க்கவில்லையே..

இந்த மக்கள் கூட்டத்தின்
கடைசியில் நின்று
இறுதி அஞ்சலி செலுத்கிறேன்
நானும்.
என் ராஜாவே,
நீயும்
தமிழ் தேசியம்
பேசினாயே…
ஏன் இன்று
மௌனித்துப் போனாய்.,!

  • சி். அருள்தாசன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular