
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற மஇகா நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
காஹாங் மற்றும் கெமெலா தொகுதிகளில் மஇகா நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
புக்கிட் பாத்து மற்றும் பெர்லிங் தொகுதிகளில் இன்னும் கடுமையாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
தேசிய முன்னணியின் இதர பங்காளி கட்சிகளும் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் 4 தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெறும் என தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.


