
அனைத்துலக யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்காக் சக்தி யோகா ஓஷோ ஷாலா நிலையத்தின் யோகா தின நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்டம் ஜூன் 20 ஆம் தேதி சனிக்கிழமை இங்குள்ள தங்காக் தானா மேரா தமிழ் பள்ளியில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வை இந்நிலையத்தின் யோகா பயிற்சி ஆசிரியர் ரேகா கிருஷ்ணன் வெற்றிகரமாக வழி நடத்தினார்.
இந்த யோகா தின பயிற்சி மற்றும் கொண்டாட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை 93 பேர் பேர் கலந்து கொண்டனர்.
மாஸ்டர் எஸ்கே துரை தலைமையில் வழிநடத்திப்பட்டு வரும் சக்தி யோகா நிலையத்தைச் சேர்ந்த 54 கிளைகள் நாடு தனிமை நிலையில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்வை நடத்தியது.

நாடு தழுவிய நிலையில் சுமார் 6200 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டதாக ரேகா கிருஷ்ணன் கூறினார்.
ஒரு மனிதரின் மன நல, உடல்நல முன்னேற்றத்திற்கு இந்த யோகா பயிற்சி மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஆன்மீகத்திற்காக தொடங்கப்பட்ட இந்த யோகா பயிற்சி, தற்போது மனிதரின் அன்றாட வாழ்க்கை முறையில் தேவைப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நமது பாரம்பரிய கலையான சிலம்பம், தெக்குவான்டோ ஆகிய படைப்புகளையும் இந்த நிலையத்தின் மாணவர்கள் திறமையாக வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் விளையாட்டு நிர்வாகத்தில் இளங்கலை பெற்ற நூருல் அமீரா தமது தெக்குவான்டோ கலையை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


