Thursday, August 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு சம்பவம்: முழுமையான விசாரணை வேண்டும் – டத்தோஸ்ரீ அழகேசு கோரிக்கை!

கோலாலம்பூர் ஆக 6

மலேசியாவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மலேசியா மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு அவர்கள் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“ஒரு ஆசிரியரின் உயிரிழப்புக்கான முழுமையான உண்மை என்ன?
இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது?
இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக விசாரிக்கப்படுகிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், உண்மை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அழகேசு வலியுறுத்தியுள்ளார்.

யாரையும் முன்கூட்டியே குற்றம் சாட்டுவது எங்களின் நோக்கம் அல்ல. ஆனால் ஒரு உயிரிழப்புக்கு நியாயமான பதில் கிடைக்க வேண்டும். குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் உண்மை தெரிய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் பணியாற்றும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மை வெளிவர வேண்டும்…
நீதியான விசாரணை நடைபெற வேண்டும்…
ஒரு உயிரின் பின்னால் உள்ள கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க காவல்துறை தெளிவான விசாரணை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular