Friday, August 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்.

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில வகை ஆயுதங்களின் விநியோகத்தில் அமெரிக்க ஆயுதப் படைகள் சவால்களைச் சந்தித்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் பேசிய அவர், போர் மிக விரைவில் முடியும் என்றும், ஈரானால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களின் விநியோகம் 

ஈரானுடனான ஐந்து மாத போரின் போது, அமெரிக்க இராணுவம் தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் பெரும் பகுதியை முடித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் சில குறிப்பிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் கையிருப்பில் உள்ள போதிலும், மற்ற சில ஆயுதங்களின் விநியோகம் சற்று குறைவாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் நிலைமையைச் சமாளிக்க, பேட்ரியாட் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளுக்கான வசதிகள் உட்பட, கூடுதல் உற்பத்தி ஆலைகளை அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்கள் கட்டியெழுப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular