
ஜசெகவின் இரண்டு தவணை மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் சிவ் சொங் சின் எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவார் என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் சு ஃபோ ஈ மெங்கெபொல் சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடுவார் என போக்குவரத்து அமைச்சருமான அவர் சொன்னார்.
நேற்று இரவு என்று பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகளை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
33 வயதுடைய குளுவாங் வாசியான சு இந்த தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்றார் அவர்.
அதே வேளையில் எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சிவ் லாபிஸ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என அவர் அறிவித்தார்.
குளுவாங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மெங்கிபொல் சட்டமன்ற தொகுதி ஜசெகவின் கோட்டையாக விளங்கி வருகிறது.


