Saturday, June 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹாடி அவாங் அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதி

பாஸ் தலைவர் ஹாடி அவாங் நாட்டில் அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதி என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
ஒரு பெரிய இஸ்லாமிய கட்சியை வழிநடத்தும் ஹாடி திரங்கானு மந்திரி பெசாராக பதவி வைத்துள்ளார். மேலும் பல தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் முடிவு செய்ய அதிகாரம் ஹாடி அவாங்கிற்கு இல்லை என பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணனின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஒரு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து பல நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றிய ஒரு பெரிய கட்சியை வெற்றிகரமாக வழி நடத்தி வரும் ஒரு இஸ்லாமிய தலைவர் என அவர் சுட்டி காட்டினார்.
தலைவர்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் பேச்சு வார்த்தைக்கு பிறகுதான் எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படும் என்பதை நன்கு தெரிந்து, சரியான தகவலை வெளியிடும் ஒரு மூத்த அரசியல்வாதி ஹாடி என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் அரசியல் அனுபவம் குறைந்தவர்கள் பாஸ் தலைவரைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிடக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
ஒரு கட்சி மற்றும் கூட்டணியில் எப்படி நடந்து கொள்வது என்பது பாஸ் தலைவருக்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு யார் முறையாக சேவையாற்றி வருவது என்பது மக்களால் மதிப்பிட முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் ஒரு பிரதான கட்சியாக விளங்கி வருகிறது என்பதை மறந்து விட வேண்டாம் என திரங்கானு மந்திரி பெசாரின் மலாய்காரர்கள் அல்லாத பிரிவின் சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular