Friday, June 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பிலிப்பைன்ஸ் ஏர் ஆசியா பற்றிய தகவல்கள் உண்மையல்ல!

ஏர் ஆசியா எக்ஸ் (ஏர் ஆசியா குரூப்) தனது விமான நிறுவனமான பிலிப்பைன்ஸ் ஏர் ஆசியாவின் செயல்பாடுகள் நிறுத்தப்படவுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை, மேலும் இந்த விமான நிறுவனத்தின் வர்த்தகம் அல்லது செயல்பாடுகளின் யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை.
தனது அனைத்து 72 விமானங்களும் வழக்கம் போல் முழுமையாக இயங்கி வருகின்றன. வானிலை மற்றும் விமான இயக்கத்தை பாதிக்க கூடிய பிற பொதுவான காரணங்களுக்கு உட்பட்டு, அதன் நெட்வொர்க் முழுவதும் திட்டமிட்டபடி விமானங்கள் மற்றும் சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த ஒருங்கிணைந்த மற்றும் பரபரப்பான அறிக்கைகளை பிலிப்பைன்ஸ் விமான போக்குவரத்து துறையில் நியாயமான போட்டியை சீர்குலைப்பதே நோக்கமாகக் கொண்டு நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியே என ஏர் ஆசியா குழுமம் கூறுகிறது.
இதுபோன்ற அவதூறான தகவல்கள் பயனீட்டாளர்களின் தேர்வுகளை கட்டுப்படுத்தவும் மற்றும் சந்தையில் ஒரு தனி மனித ஏகபோகத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தவும் முற்படுபவர்களின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன.
ஒரு தனி மனித ஏகபோகம் என்பது சந்தையில் ஆதிக்கம் செலுத்துபவர்களை தவிர வேறு எவருக்கும் பயனளிக்காது.
பயணிகளுக்கு இது பெரும்பாலும் குறைந்த போட்டி, குறைவான தேர்வுகள் மற்றும் கணிசமான அதிக விமான கட்டணங்களுக்கு வழி வகுக்கிறது என ஏர் ஆசியா எக்ஸ் குழுமம் கூறுகிறது.
இதனிடையே ஏர் ஆசியா நீண்ட காலமாக மலிவு விலை பயணத்திற்கு ஆதரவளித்து வருவதாக ஏர் ஆசியா குழுமத்தின் இணை நிறுவனரும் ஆலோசகரமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
ஏர் ஆசியா பயணிகளுக்கு பாதிப்பை விளைவிக்கும் அல்லது விமான இணைப்பிற்கான அணுகலை கட்டுப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அது உறுதியாக எதிர்க்கும் என்றார் அவர்.


ஏர் ஆசியா பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் கிட்டதட்ட 70 லட்சம் பயணிகள் பயணித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் மீதான எங்களது அர்ப்பணிப்பு முழுமையானது மற்றும் உறுதியானது.
அந்நாட்டில் மற்றும் அதன் மக்களின் எதிர்காலம் ஆகியவற்றில் நாங்கள் ஆழமான முதலீடு செய்துள்ளோம்.
ஒரு தசாபத்திற்கும் மேலாக விமான பயணத்தை ஜனநாயக படுத்துவதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறோம்.
இதன் மூலம் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு பெற்றிராத லட்சக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வான் வழியாக பயணிப்பதை சாத்தியமாகி உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தை நோக்கு கையில் நாடு முழுவதும் புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நாங்கள் பெரும் முதலீடு செய்துள்ளோம்.
இவற்றில் நினாய் அக்வினோ அனைத்துலக விமான நிலையம் மற்றும்
மக்டன்-செபு அனைத்துலக விமான நிலையம் ஆகியவை அடங்கும்.
உலகின் முதல் குறுகிய உடல் கட்டமைப்பு கொண்டு உலகளாவிய குறைந்த கட்டண நெட்வொர்க் விமான நிறுவனமாக மாறுவதற்கு எங்களது விமானங்களின் எண்ணிக்கை மற்றும் புதிய விமானங்களுக்கான ஆர்டர்களே விரிவுபடுத்தி வரும் வேளையில், பிலிப்பைன்ஸில் எங்களது செயல்பாடுகளில் கூடுதல் விமானங்களை ஈடுபடுத்த உத்தே செய்துள்ளோம்.
இந்த முன்னேற்றங்கள் பிலிப்பைன்ஸ் ஏர் ஆசியா தனது நெட்வொர்க்கை விரிவு படுத்தவும் இன்னும் கூடுதலான போட்டித் தன்மை வாய்ந்த கட்டணங்களை வழங்கவும் மற்றும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தொடர்ந்து சிறந்த மதிப்பை வழங்கவும் அனுமதிக்கும்.
பிலிப்பைன்ஸ் ஏர் ஆசியா பொது மக்களுக்கு சேவை செய்வதிலும், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆதரிப்பதிலும், ஒவ்வொரு பிலிப்பைன்ஸ் குடிமகனுக்கும் பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான விமான பயணம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதிலும் உறுதியுடன் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular