
16 ஆவது மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வழி விடும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
மாநில சட்டமன்றத்தை கலைக்க நெகிரி செம்பிலான் மாநில ஆளுநர் துவாங்கு முரிஸ் துவாங்கு முனாவிர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நேற்று இரவு நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் கூறினார்.
ஆக கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இருப்பினும் அண்மையில் அம்னோவை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில மந்திரி பெசாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து மாநில அரசியலில் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டது.
விரைவில் நடைபெறவருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் 36 தொகுதிகளிலும் பாக்காத்தான் ஹராப்பான் போட்டியிடும் என அமிருடின் ஹருண் கூறியுள்ளார்.


