Friday, June 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம்?

அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் நாளை புதன்கிழமை கலைக்க படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்ந்து, இன்று காலை நெகிரி செம்பிலான் பாக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மாநில மந்திர பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் ரகசிய சந்திப்பு நடத்தினர்.
மாநில அரசியல் நிலவரம் குறித்து இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தொடங்கியது.
இந்த சந்திப்பில் ஜசெக,பிகேஆர் மற்றும் அமானா சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து நாளை புதன்கிழமை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முரிஸ் துவாங்கு முனாவிருடன் அமிருடின் ஹருண் சந்திப்பை நடத்துவிருக்கிறார்.
இந்த சந்திப்பில் மாநில சட்டமன்றத்தை கலைக்க அமிருடின் ஹருண் ஆட்சியாளரின் அனுமதியை பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில மந்திரி பெசாருக்கான ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை தொடர்ந்து, மாநிலத்தில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular