Friday, June 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது

மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வழி விடும் வகையில் ஜொகூர் மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.
மாட்சிமை தங்கிய பேரரசரும் ஜொகூர் ஆட்சியாளருமான சுல்தான் இப்ராஹிம் இதற்கு அனுமதி வழங்கியதாக ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலி இந்த அறிவிப்பை செய்தார்.
ஒழுக்கமாக கவனிக்கப்படும் இந்த மாநில சட்டமன்றம் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் 56 தொகுதிகளில் தேசிய முன்னணி 40 தொகுதிகளை கைப்பற்றின.
இந்த தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் 12 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் 3 மற்றும் பாஸ் 1 தொகுதியையும் கைப்பற்றியது.
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை பிரதிநிதித்து எம்ஐபிபி 4 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பி.புனிதன் அறிவிப்பு செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular