
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் எம்ஐபிபி 4 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பி.புனிதன் அறிவித்தார்.
மேலும் விரைவில் நடைபெறுவதற்கும் என எதிர்பார்க்கப்படும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளிலும் தமது கட்சி போட்டியிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமது கட்சியின் இந்த முடிவுக்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைத்துவம் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜொகூரில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் வகையில், தமது கட்சி போட்டியிட வெற்றி பெறும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவருமான அவர் சொன்னார்.
ஜொகூரில் 45 விழுக்காடு முதல் 50 விழுக்காடு இந்திய சமூகத்தினர் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆதரவு எதிர் கூட்டணிக்கு வாக்குகளாக மாறும் என்றார் அவர்.
எம்ஐபிபி கட்சி எதிர் கொள்ளும் முதலாவது தேர்தல் இது என்பதால், கட்சியின் தலைமைத்துவம் நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.


