
Fast Tech Security Service நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ அழகேசுவின் புதல்வர் தினேஷின் 21 ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 24 ஆம் தேதி தலைநகர் சிலாங்கூர் கிளப்பில் நடந்தேறியது.
இந்த பிறந்தநாள் விழாவில் சிறப்பு பிரமுகராக முன்னாள் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.

மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் Fast Tech Security Service நிறுவனத்தின் இயக்குனர்கள் டத்தோ ஷாமிளா மற்றும் டத்தோ மகேந்திரன் கலந்து சிறப்பித்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் டத்தோஸ்ரீ அழகேசுவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் Fast Tech Security Service நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
தமது புதல்வரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் டத்தோஸ்ரீ அழகேசு நன்றி தெரிவித்துக் கொண்டார்.


