Wednesday, May 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாத்தேக் ஏர் மற்றும் மாரா கார்ப்பரேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

மலேசியாவின் விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல்
(MRO) துறையை வலுப்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறைக்கான திறமையான விமானத்துறை வல்லுநர்களை உருவாக்குவதற்குமான ஒரு முன்னோக்கு ஒத்துழைப்பாக,பாத்தேக் ஏர் மற்றும் மாரா கார்ப்பரேஷன்(MARA Corp) கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தில் பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் முறை டத்தோ சந்திரன் ராம மூர்த்தி மற்றும் MARA Corp குழுமத்தின் இடைக்கால தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அமீர் அசார் இப்ராஹிம் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
புத்ரா உலக வாணிப மையத்தில் மாராவின் 60 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு, துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி,மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷிராப் வஜ்டி டுசுக்கி, மாரா தலைமை இயக்குனர் டத்தோ ஸூல்பிக்கிர் ஒஸ்மான்,லையன் குழுமத்தில் நிறுவனர் ருஸ்டி கிரானா மற்றும் இவ்விரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் மூலம், பாத்தேக் ஏர் சுபாங்கின் ஹேங்கர் வசதிகளில்(Hanger facilities) அடிப்படை பராமரிப்பு நடவடிக்கைகள் நிறுவுவதை ஆராயும்.
இது செயல்பாட்டுத் திறன் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த ஒத்துழைப்பு மலேசியாவின் பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் மாற்றியமைப்பு
(MRO) சுற்றுச்சூழல் அமைப்பில் வலுப்படுத்தும் ஒரு விரிவான முயற்சி ஒரு பகுதியாக ஆசியா ஏரோ டெக்னிக் சென்டிரியான் பெர்ஹாட்(AAT) நிறுவனத்தை மதிப்பீடு செய்து மறு சீரமைப்பதற்கான திட்டங்களையும் உள்ளடக்கியது.
திறன் மேம்பாடு இந்து முயற்சியில் ஒரு முக்கிய தூணாக அமைகிறது.
நான்கு ஆண்டுகளில் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகளிலிருந்து
(MRSM) 200 மாணவர்கள் வரை CAAM Part 66 உரிமம் பெற்ற விமான பொறியியலாளர் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள பாத்தேக் ஏர் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இந்தப் பங்களிப்பு பாத்தேக் ஏரின் செயல்பாட்டு முன்னுரிமைகளை விமானத்துறையின் நீண்ட கால தேவைகளுடன் சீரமைப்பதில் ஒரு கூட்டு நடவடிக்கையை பிரதிபலிப்பாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் முறை டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதும் திறமைகளில் முதலீடு செய்வதும் நிலையான வளர்ச்சிக்கு அவசியம் என்றார் அவர்.
‘சுபாங்கில் எங்களது பராமரிப்பு இருப்பைத் திட்டப்படி விரிவாக்கம் செய்வதும், வருங்கால பொறியியலாளர்களை உருவாக்குவதற்கான கட்டமைக்கப்பட்ட அணுக முடியும் இணைந்து, மலேசியாவின் விமான போக்குவரத்து சூழலில் பாத்தேக் ஏர் இன்னும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இது இன்றைய திறனை மேம்படுத்துவதோடு நாளைய பணியாளர்களை தயார்படுத்துவதையும் பற்றியது என்றார் அவர்.
இதனிடையே இந்த ஒத்துழைப்பு மாரா கார்ப்பரேஷனின் விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என MARA Corp குழுமத்தின் இடைக்கால தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ அமீர் அசார் தெரிவித்தார்.
மேலும் MRO பணியாளர்களின் தயார் நிலை ஆகியவற்றின் மூலம் நீண்ட கால மதிப்பை பெறும் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular