Thursday, May 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர்பஸ் ஏ220(Airbus A220) ஒப்பந்தத்திற்கு 19 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும்-பெர்னாண்டஸ்

ஏர் ஆசியா நிறுவனம் 150 ஏ220(A220) ரக விமானங்களை வாங்குவதற்கு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என அந்நிறுவனத்தின் ஆலோசகர் டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
இந்த A220 ரக விமானங்களில் முதல் விநியோகம் 2028-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கேப்பிட்டல் ஏ
(Capital A) நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
“A220 ரக விமானங்கள் புதிய சந்தைகளையும், வழித்தடங்களையும் உருவாக்குவதுடன், உலகின் முதல் உண்மையான குறைந்த கட்டண வலையமைப்பு விமான நிறுவனத்தை உருவாக்கும் எங்களது இலக்கை நோக்கி எங்களை நெருங்க செய்கிறது” என கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மிராபல்(Mirable) நகரில் இருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளரிடம் அவர் பேசினார்.


160 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் எங்களது லாப வரம்பை(Margin) இரண்டு முதல் மூன்று புள்ளிகள் வரை உயர்த்தவும், மிகவும் ஆழமான ஒரு வலை அமைப்பை உருவாக்கவும் உதவும் என அவர் தெரிவித்தார்.
இந்த விமானத்தால் தொடர்ந்து ஏழு மணி நேரம் வரை பறக்க முடியும், இது ஆசியாவில் எங்களுக்கு மிகப்பெரிய நன்மையாக அமையும் என்றார் அவர் முன்னதாக தமது உரையில் பெர்னாண்டஸ், ஏர்பஸ் நிறுவனம்
A220-500 என்று அழைக்கப்படும் நீட்டிக்கப்பட்ட பதிப்பை உருவாக்கினால், மேலும் 150 விமானங்களை வாங்குவதில் தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


இந்த விமானம் சுமார் 185 இருக்கைகளை கொண்டிருக்கக்கூடும். இது 19 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம். ஒருவேளை அந்த பெரிய பதிப்பு நமக்கு கிடைத்தால் இது 38 பில்லியன் அமெரிக்க டாலராக உயரக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள A320 உலக விமானங்களில் ஆயுட்காலம் முடிவடைகிறது என்றும், 180 இருக்கைகளைக் கொண்ட அந்த ஜெட் விமானங்கள் இதற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போதைய நெருக்கடி காலகட்டத்தில் நாங்கள் ஏன் இவ்வளவு விமானங்களை வாங்குகிறோம் என்று மக்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நெருக்கடிகள் என்பவை துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும் என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் ஏர் ஆசியாவை எளிதான தருணங்களில் அல்லாமல், சரியான தருணங்களில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதன் மூலமே உருவாக்கியுள்ளோம். இந்த ஆர்டர் எங்களது நீண்ட கால ஒழுக்கத்தையும், எங்களது லட்சங்களின் அளவியும் பிரதிபலிக்கிறது ஏன் அவர் குறிப்பிட்டார்.
ஏர்பஸ் உடனான எங்களது கூட்டான்மை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கிறது மற்றும் நாங்கள் அடைந்துள்ள அனைத்து சாதனங்களுக்கும் அதுவே மையமாக இருந்துள்ளது. இன்று அந்தப் பயணத்தில் மற்றொரு மைக்கல். இன்னும் வரவிருக்கும் பல மைல்கற்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கனடிய பிரதமர் மார்க் கார்னியும் கலந்து கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular