Wednesday, May 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

டாமான்சாரா பெர்டானாவில் கத்திகளுடன் ஆவேசம்: நபர் கைது

டாமான்சாரா பெர்டானா பகுதியில் இரண்டு கத்திகளுடன் ஆவேசமாக நடந்துகொண்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. சந்தேக நபர் ஆபத்தான முறையில் நடந்துகொண்டு, அருகில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடனடி நடவடிக்கை எடுத்து, எந்த பெரிய சேதமும் ஏற்படுவதற்கு முன் அந்த நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், மேலதிக விசாரணைக்காக அவர் டாமான்சாரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொது இடத்தில் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அந்த நபர் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular