Wednesday, May 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து இன மக்களையும் அரவணைப்போம்!

இந்நாட்டில் அனைத்து இன மக்களின் நலன்களை காக்க தான் நாம் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரி மொக்தார் வலியுறுத்தினார்.
தற்போது நாட்டில் இனங்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை மிகுந்த கவலையை தருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் திரங்கானு சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது அச்சத்தை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலை ஒருவருக்கு ஒருவர் இடையிலான உறவுகளில் அந்நியப்பட்டு போவதை நம்மால் காண முடிகிறது என்றார் அவர்.
இந்நாட்டில் பல இனங்களுக்கு இடையிலான நல் உறவு என்பது நம் பாரம்பரையாக பெற்ற இறைவனின் அருள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் நாம் மிகவும் சாதுரியமான முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
அப்படி தவறினால் இந்த நிலை நமக்கு பெரும் பாதிப்பை தரும் என அவரை எச்சரித்தார்.
மலேசியாவில் பல இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நாம் இங்கு மலாய்காரருக்கு மட்டும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மாறாக சீனர்கள், இந்தியர்கள், கடசான்,இமான்,பிடாயு ஆகிய அனைத்து இனங்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் நாம் என அவர் நினைவுறுத்தினார்.
இந்நாட்டில் பல்லின மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு வலுப்பட வேண்டும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular