Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர் மாநகர் தின நெடுந்தூர ஓட்ட போட்டியில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

2026 கோலாலம்பூர் மாநகர் நெடுந்தூர
(Kuala Lumpur City Day Half Marathon) போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் சிட்டி சென்ட்ரலில் இந்த போட்டி தொடங்கியது.
வருடாந்திரம் நடைபெறும் இந்த போட்டியை கூட்டரசு பிரதேச தடகள சங்கம் ஏற்பாடு செய்தது.
இந்த போட்டிக்கு கூட்டரசு பிரதேச தடகள சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் தலைமையேற்றார்.


இந்தப் போட்டியின் 21 கிலோமீட்டர் ஓட்டத்தை காலை 4.15 மணிக்கு டத்தோஸ்ரீ டாக்டர் புலேந்திரன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த 21 கிலோமீட்டர் ஓட்ட போட்டியில் சுமார் 4000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு காலை 6.10 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்ட போட்டியை டாக்டர் புலேந்திரன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த ஓட்டத்தில் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு காலை 7.30 மணிக்கு 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோமீட்டர் தூர ஓட்ட போட்டியை கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றத்தின் தலைவர் டத்தோ ஸ்டுவார்ட் ராமலிங்கம் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த ஓட்ட போட்டியில் சுமார் 5 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகளின் அனைத்து பிரிவிலும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு பரிசுகளை டாக்டர் புலேந்திரன் எடுத்து வழங்கினார்.
மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் டாக்டர் புலேந்திரன் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கூட்டரசு பிரதேச தடகள சங்கம் ஆண்டுதோறும் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular