Wednesday, April 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தொழில் மேற்பாட்டிற்கு இந்த பயிற்சி துணை புரியும்!

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த இலவச பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் தொழில் மேம்பாட்டுக்கு துணை புரியும் என தாம் நம்புவதாக Heavenly Baker’s Cakes and Pastries கேக் தயாரிப்பு தொழிலை நடத்தி வரும் பூச்சோங்கை சேர்ந்த சந்திரிகா நாயுடு ராமையா கூறுகிறார்.


கடந்த 11 ஆண்டு காலமாக இந்த கேக் தயாரிப்பு துறையில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொழிலை வீட்டிலேயே நடத்தி வருகிறேன். நண்பர்கள் மற்றும் சமூக வலைதளத்தின் மூலம் இந்த விற்பனையை நான் செய்து வருகிறேன்’ என்றார் அவர்.
குறிப்பாக ” cake bahaya’ என்று அழைக்கப்படும் chocolate moist cake அதிக விற்பனையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Navem என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கேக் தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டு இந்த தொழில் குறித்து தாம் அதிகம் தெரிந்து கொண்டதாக அவர் சொன்னார்.
தனித்து வாழும் தாய்மார்கள் இந்த தொழிலுக்கு அதிக ஆதரவு கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.


ஆகையால் இந்த தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்பயிற்சியில் கலந்து கொள்ள தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக சந்திரிகா குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular