Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் 15-வது நிறைவு விழா!

இங்குள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் 15-வது நிறைவு விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிறைவு விழா கொண்டாட்டம் கடந்த ஏப் 9 ஆம் இங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இந்தக் கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனிடையே கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் அமைப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாக மலேசியாவிற்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி தமதுரையில் கூறினார்.


இந்த கலாச்சார மையம் உலக அளவில் பல நாடுகளில் இருந்த போதிலும், மலேசியாவில் இந்த மையம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை இந்நாட்டில் பரப்புவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கலாச்சாரம் மையத்தின் இயக்குனர் விஜயலட்சுமி சுந்தர்ராஜன் தலைமையில் இந்த மையம் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் பாராட்டினார்.
இதர நாடுகளை ஒப்பிடுகையில் மலேசியாவில் இந்த கலாச்சாரம் மையத்தின் செயல்பாடு இந்திய அரசாங்கத்தின் பாராட்டுதலை பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மையில் இந்திய பிரதமர் வருகையின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில், இந்த கலாச்சார மையத்தின் ஏற்பாட்டில் 800 நடனமணிகள் படைத்த நாட்டியம், இந்திய பிரதமரை வெகுவாக கவர்ந்து விட்டதாக அவர் சொன்னார்.
கடந்த 1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தோற்றுவித்த இந்த மையத்தின் 77 ஆவது நிறைவு ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த கொண்டாட்டம் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இதனிடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தமதுரையில் கூறினார்.
இந்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்த இந்த கலாச்சார மையத்திற்கும் முக்கிய பங்குண்டு என்றார் அவர்.
இந்நாட்டில் பல இனங்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவது மகிழ்ச்சியான செய்தியாகும் என அவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு இந்த கலாச்சார மையம் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
மலேசியாவில் பல இன மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த தமது அமைச்சு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கல்பனா நாட்டிய தியேட்டரைச் சேர்ந்த அம்பிகா நகுலேந்திரனின் நாட்டியம் உட்பட பல கலாச்சார நடனங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்தக் கொண்டாட்டத்தில் இதர சிறப்பு பிரமுகர்களாக தேசிய நிலநதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி. சகாதேவன், துங்கு ஜைன் அல்-அபிடின் துவாங்கு யுனிஸ்,சுத்ரா அறவாரியத்தின் தலைவர் டத்தோ ரம்லி இப்ராஹிம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular