
உலகளவில் எரிபொருள் வெளியேற்றத்தின் காரணமாக தனது விமான பயணங்களின் எண்ணிக்கையை பாத்தேக் ஏர் 35 விழுக்காடாக குறைக்கிறது.
மத்திய கிழக்கில் பதற்றத்தின் காரணமாக எரிபொருள் விலையேற்ற தாக்கத்தை சமாளிக்க உலகளவில் இதர விமான நிறுவனங்களுடன் இணைந்து பாத்தேக் ஏர் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
விமான எண்ணை விலைகள் வரலாற்று ஏற்றத்தை அடையும் வேளையில், நிதி வளத்தை நிர்வகித்து வருவதற்கு முன்னெடுப்பு நடவடிக்கையாக இந்த விமான பயணங்களில் எண்ணிக்கையை குறைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஏப்ரல் மாதம் முதல் கால் பகுதியில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றார் அவர்.
சுமார் 3500 ஊழியர்கள் பணி புரியும் இந்த ஹைபிரிட் விமான நிறுவனம், ஊதியமில்லா விடுப்பை வழங்குகிறது.
எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் விடுமுறைக்கு இன்று ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கடந்த பிப்ரவரி இறுதி முதல் உலக அளவில் விமான எண்ணை விலைகள் இரண்டு மடங்காக விலையேற்றம் கண்டுள்ளது.
கடந்த 27 மார்ச் வார இறுதியில் ஒரு பீப்பாய் என்னை
US 195.19 ஆக உயர்வு கண்டுள்ளது. இது கடந்த மாத தொடக்கம் முதல் 104 விழுக்காடு உயர்வாகும்.
இந்த உயர்வால் விமான நிறுவனங்களின் நடவடிக்கை செலவினங்கள் உயர்வு கண்டுள்ளதோடு, மத்திய கிழக்கில் வான் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் அனைத்துலக பயணங்களுக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்த பதற்றத்தின் காரணமாக வான் போக்குவரத்து தொழில்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி சுட்டி காட்டினார்.
இதன் காரணமாக பாத்தேக் ஏர் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் பெரும்பாலான விமான பயணங்களை ரத்து செய்யாமல், பயணி எண்ணிக்கையை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக கோலாலம்பூர் மற்றும் பினாங்கு நகருகளுக்கான தினசரி விமான சேவை 5-லிருந்து
2-ஆக குறைக்கப்படலாம்.
அதே போல் கோலாலம்பூர்-காட்மாண்டு மற்றும் கோலாலம்பூர்-பேர்த் நபர்களுக்கான பயனை எண்ணிக்கைகள் குறைக்கப்படலாம் என்றார் அவர்.
மேலும் சில நபர்களுக்கான திட்டமிடப்பட்ட புதிய விமான சேவைகள் ஒத்திவைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற ஊழியர்களின் பயணங்கள் முடக்கப்படலாம் என அவர் சொன்னார்.
பாத்தேக் ஏர் 21 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வாரத்திற்கு 1,400 விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.


