Sunday, April 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலகளாவிய எரிசக்தி சவால்களை சந்திக்க மன உறுதி, ஒற்றுமை மற்றும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சவால்களை சந்திக்க மன உறுதி, ஒற்றுமை மற்றும் பொறுமையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்
(போம்கா) வலியுறுத்தியது.
மத்திய கிழக்கில் நிலவு வரும் மோதல்களின் காரணமாக உருவெடுக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போம்கா தலைமை செயல் முறை அதிகாரி டாக்டர் சரவணன் தம்பி ராஜா கூறினார்.
எரிசக்தி சவால்களை சந்திக்க மலேசியர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம்மின் கோரிக்கையை போம்கா வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய விநியோக தடைகள், எரிபொருள் மற்றும் எரிசக்தி சந்தைகளில் உள்ள நிலையற்ற தன்மை அனைத்தும் மலேசியாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றார் அவர்.
இவை அனைத்தும் உலகளாவிய செலவுகள் உயர்வதற்கு காரணமாக அமைவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
எரிபொருள் விலை ஏற்றம், மின்சார கட்டணங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை செலவை தவிர்க்க முடியாமல் பாதிக்கும் போம்கா ஒப்புக்கொள்கிறது.
இந்த அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது நாடு நிச்சயமற்ற காலகட்டத்தைக் கடந்து செல்லும் வேளையில் மலேசியர்கள் அமைதியாகவும், மன உறுதியுடனும் மற்றும் பொறுமையுடனும் இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த நிலையில் பயனீட்டாளர்கள் மீதான தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் Budi95 போன்ற திட்டங்களின் கீழ் எரிபொருள் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, அதனுடன் இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் உதவிகள் போன்ற நடவடிக்கைகள் உலகளாவிய விலை உயர்வுகளால் மக்கள் மீது முழுமையாக சுமை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய முன்னெடுப்புகளாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பரந்த பொருளாதார எதார்த்தங்களை நிர்வகிக்கும் அதே வேளையில் பயனீட்டாளர்களை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இவை பிரதிபலிப்பாக அவர் குறிப்பிட்டார்.
லாபமீட்டல் மற்றும் நியாயமற்ற விலை உயர்வுகளை தடுப்பதற்காக விநியோக சங்கிலிகள் மற்றும் நியாயமற்ற விலை உயர்வுகளை கண்காணிப்பதின் மூலம் அதிகாரிகள் களத்தில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என போம்கா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சவாலான காலகட்டத்தில் வர்த்தகர்கள் நேர்மையாக செயல்படுவதையும் பயனீட்டாளர்கள் சுரண்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய தொடர்ச்சியான ஆய்வுகளும் அமலாக்க நடவடிக்கைகளும் அவசியமாகும் என்றார அவர்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலை மாற்றங்கள் நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வர்த்தக நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் லாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற காலகட்டத்தில் பொது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கும், சுமைகளை சமமாக பகிரப்படுவதை உறுதி செய்வதற்கும் நெறிமுறை சார்ந்த வணிக நடைமுறைகள் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார்.


இனி வரும் காலங்களில் மீள்திறன் என்பது ஒரு கூட்டு தேசிய முயற்சியாக இருக்க வேண்டும். மாறிவரும் ஏரி சக்தி சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில் பயனீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் அனைவருக்கும் பங்கு உண்டு.
பயனீடாளர்கள் சிக்கனமாக செலவு செய்வதன் மூலம், ஆற்றல் மற்றும் திறன்மிக்க பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும் பங்களிக்க முடியும். அதே வேளயில் கொள்கை வகுப்பாளர்கள் சம நிலையான மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மலேசியா இதற்கு முன்பும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது.கோவிட் 19 பெருந்தொற்றின் போது, மலேசியர்கள் ஒன்று சேர்ந்து நின்று ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதின் மூலம் குறிப்பிடத்தக்க ஒற்றுமையையும் மீள் திறனையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆகையால் இன்று இந்த புதிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அனைத்து மலை சிலைகளையும் மீண்டும் ஒரு முறை தோளோடு தோல் நின்று செயல்படுமாறு போம்கா அழைப்பதாக அவர் தெரிவித்தார்.
வரும் பாதை கடினமாக இருக்கலாம் என்ற போதிலும் ஒத்துழைப்பு, ஒழுக்கம் மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வுடன் மலேசியா இந்த காலகட்டத்தையும் கடந்து மேலும் வலிமையாக வெளிவரும்.
பயனீட்டாளர்கள் நலன்களை பாதுகாப்பதில் போம்கா உறுதியாக உள்ளது. எந்த ஊரு பயனீட்டாளரும் பின் தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினுடன் போம்கா தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என அவர் உறுதியளித்தார்.
பயனீட்டாளர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்:

  1. அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உணவு, வீட்டு உபயோக பொருட்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற அல்லது திடீர் வாங்குதல்களை தவிர்க்கவும்.
  2. திறமையான உணவு மேலாண்மையை கடைப்பிடியுங்கள். முடிந்தவரை உள்ளூர் தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள், உணவை கவனமாக திட்டமிடுங்கள், மற்றும் உணவு விரயத்தை குறைக்கவும். அதிக விலை கொண்ட பொருட்களுக்கு பதிலாக மலிவான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
  3. போக்குவரத்து செலவுகளை குறைக்கவும். எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள், கார் பூலிங் செய்யுங்கள், மற்றும் பயணங்களை திறமையாக திட்டமிடுங்கள்.
  4. ஆற்றல் திறனை பின்பற்றுங்கள். வீட்டில் ஆற்றல் சேமிப்பு பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் மின்சாரம் மற்றும் நீர் பயன்பாட்டை குறைக்கவும்.
  5. நிதிநிலைத் தன்மையை வலுப்படுத்துங்கள். செலவுகளை கண்காணிக்கவும், தேவையற்ற கடன்களை தவிர்க்கவும் மற்றும் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க அவசர கால சேமிப்பை உருவாக்கவும்.
  6. நியாயமற்ற விலை உயர்வுகளுக்கு எதிராக விழிப்புடன் இருங்கள்.பயனீட்டாளர்கள் விலைகளை ஒப்பிட்டு பார்த்து நியாயமற்ற விலை உயர்வுகள் அல்லது லாபமீட்டல் குறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சிடம் புகார் அளிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  7. சமூக முன்னெடுப்புகளை ஆதரியுங்கள். கூட்டுக் கொள்முதல், சமூக ஆதரவு அமைப்புகள் போன்றவற்றில் பங்கேற்கவும்.மேற்கண்ட ஆலோசனைகளை போம்கா தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் வழங்கினார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular