
உலகின் இரு முக்கிய நகர்களான சீனாவின் ஷாங்காய் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகர்களுக்கு முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பாத்தேக் ஏர் சிறகடிக்கவிருக்கிறது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்தை ஆதரிக்கும் வகையில், அனைத்துலக நகர்களில் பாத்தேக் ஏர் தொடர்ந்து கால் பதித்து வருகிறது.
சீனாவில் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் வகையில் வரும் 23 ஜூன் 2026-ல் கோலாலம்பூர்-ஷாங்காய் நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
இந்த வழித்தடத்திற்கு பாத்தேக் ஏர் போயிங் 737 ரக விமானத்தை பயன்படுத்துகிறது.
தற்போது சீனாவில் சாங்ஷா,செங்டு,
குன்மிங்,குவாங்சூ,
ஜியாமென்,ஜெங்ஜோ ஆகிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடித்து வருகிறது.
ஷாங்காய் சீனாவில் உள்ள உலகளாவிய பெரு நகரமாகும். மிகவும் துடிப்பு மிக்க இந்த நகரம் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
சுறுசுறுப்பான வர்த்தக மையமாக இருந்து வரும் இந்த நகரம் அனைத்துலக சுற்றுப் பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளை இந்த நகரம் ஒரு அற்புத நகரமாக திகழ்ந்து வருகிறது.

கோலாலம்பூரில் இருந்து ஷங்காய் நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ390-லிருந்து தொடங்குகிறது.
பிஸ்னஸ் கிளாஸ் கட்டணம் வெ1,679-லிருந்து தொடங்குகிறது.
அதே வேளையில் கோலாலம்பூர்-சிட்னி நேரடி விமான சேவையை எதிர் வரும் 1 ஜூலை 2026-ல் பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
தற்போது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், மெல்போர்ன்,பேர்த் மற்றும் டென்பாசார் வழியாக சிட்னி ஆகிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடிக்கிறது.
கோலாலம்பூர்-பேர்த் நகரத்திற்கு வாரத்திற்கு 14 நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே நடப்பு சந்தை தேவையை கருத்தில் கொண்டு இந்த இரு முக்கிய நகர்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்த தாங்கள் முன்னெடுத்துள்ளதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இவ்விரு முக்கிய நகரங்களுக்கான நேரடி விமான சேவையை மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக துறையை தொடர்ந்து வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த நேரடி விமான செயல்களின் வழி 2926 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார் அவர்.
மலேசியாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பாத்தேக் ஏர் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வரும் என அவர் குறிப்பிட்டார். இதனிடையே குடும்பத்தாருடன் பயணிப்பவர்களுக்கு, சிறார்களுக்கு இலவச உணவு சலுகையை பாத்தேக் ஏர் வழங்குகிறது.


