Sunday, April 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

விமான கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று!

மத்திய கிழக்கில் போர் மோதலில் காரணமாக விமானங்களின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என கேப்பிட்டல் ஏ தலைமை செயல் முறை அதிகாரி டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
இருப்பினும் இதர விமான நிறுவனங்களை விட ஏர் ஆசியாவின் கட்டண உயர்வு குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
விமான பயண தேவைகள் அதிகரித்து வருவதால், விமானங்களை ஏர் ஆசியா ரத்து செய்யாது என்றார் அவர்.
போர் மோதலின் காரணமாக எரிபொருள் வெளியேற்றும் கண்டு வருவதால், விமான கட்டணங்களில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த கட்டண உயர்வு இதர விமான நிறுவனங்களை விட குறைவாகவே இருக்கும் என அவர் உறுதியளித்தார்.
விமான கட்டணங்கள் உயர்வு காணும். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார் அவர்.
கட்டண உயர்வு இருந்த போதிலும் ஏர் ஆசியா நிலைத்து செயல்படும். இந்த சுமையின் ஒரு பகுதியை ஏர் ஆசியா ஏற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
வளைகுடா பகுதியிலிருந்து எமிரேட்ஸ்,எத்தி ஹார்ட் ஏர்வேஸ் மற்றும் காத்தார் ஏர்வேஸ் போன்ற விமானங்களின் பயணிகள் எண்ணிக்கை குறைவதால், கூடுதல் செலவுகளை ஏர் ஆசியா ஏற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டளை உயர்வை விமான நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த தொழில் துறையில் கூட்டு ஒத்துழைப்பின் வழி இந்த விவகாரத்தை நாம் கையாள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இயன்ற வரை விமான கட்டணங்களை குறைவாக வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் ஏர் ஆசியா மேற்கொள்ளும் என அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் என்னை நிறுவனங்கள் தங்களின் பங்கை ஆற்ற வேண்டும். அதே போல் விமான நிலையங்களும் தங்களது பங்கை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular