
மத்திய கிழக்கில் போர் அபாயத்தின் காரணமாக அங்குள்ள பதற்ற நிலையை பாத்தேக் ஏர் அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக நேற்று கோலாலம்பூர்-துபாய் விமான சேவையை பாத்தேக் ஏர் ரத்து செய்தது.
இப்பிராந்தியத்தில் வான் போக்குவரத்து மற்றும் விமான சேவை நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் பாத்தேக் ஏர் கூறியது.
பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பாத்தேக் ஏர் முன்னுரிமை வழங்கி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அனைத்து நடவடிக்கைகளின் முடிவுகள் உயர்நிலை பாதுகாப்பு தரத்தை பின்பற்றுவதை உறுதி செய்ய வான் போக்குவரத்து கழகம் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் பாத்தேக் ஏர் முழுமையாக ஒத்துழைத்து வருவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
இப்பிராந்தியத்தில் விமான போக்குவரத்து அட்டவனியில் மாற்றம் இருக்கலாம் அல்லது விமான பயணங்கள் ரத்து செய்யப்படலாம்.
விமான பயணத்தின் அண்மையில் நிலவரங்கள் குறித்து பயணிகளுக்கு பாத்தேக் ஏர் இணையதளத்தில் பிரசுரிக்கப்படும்.
விமான பயண நிலவரத்தை பயணிகள் அணுக்கமாக கண்காணித்து வர வேண்டும்.அதே வேளையில் தங்களின் விமான பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு அந்த அறிக்கை ஆலோசனை கூறியது.
தனது பயணிகளுக்கு பாத்தேக் ஏர் அனைத்து உதவிகளையும் வழங்கும். பயணத்திற்கான டிக்கெட் மறு பதிவு மற்றும் தேவை ஏற்பட்டால் பணத்தை திருப்பி செலுத்தும் ஏற்பாடுகளையும் பாத்தேக் ஏர் செய்து தரும்.
ஆகையால் பயணிகள் பயணி நிலவரம் குறித்து அணுக்கமாக கண்காணித்து வர வேண்டும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.


