Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து இருக்கைகள் மற்றும் பயணங்களுக்கு 99% கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது

இந்த ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் வகையில் தனது விரிவான வழித் தடங்களில் அனைத்து இருக்கைகள் மற்றும் பயணங்களுக்கு 99% கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது.
இந்த வரையறுக்கப்பட்ட கால விற்பனையில் பயணிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அல்லது திடீர் பயணத்திற்கு குறைவான கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
இப்பொழுது முதல் 1 மார்ச் 2026 வரை ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ்-ன் AK மற்றும் D7 குறியீட்டு வழித் தடங்களுக்கு 99% கழிவு விற்பனையில் உள்ளது.
1 ஜூன் 2026 முதல் 27 மார்ச் 2027 வரையிலான பயணத்திற்கு airasia.com அல்லது AirAsia MOVE செயலியின் வழி இந்த சிறப்பு கட்டணத்திற்கான டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருவனந்தபுரம்,
ஷாங்ஸா,ஒசாகா,
சிட்னி மற்றும் இன்னும் பல, அதே போல் ஏர் ஆசியா எக்ஸின் புதிய வழித் தடங்களான தாஷ்காண்ட், இஸ்தான்புல்,
பாஹ்ராயின்** மற்றும் லண்டன்** ஆகிய நகர்களுக்கு பயணிகள் மலிவான கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
அழகிய கடற்கரைகளை கொண்ட லாபுவான்,நா டிராங்,கிராபி போன்ற அற்புதமான நகர்களுக்கு இந்த சிறப்பு கட்டணத்தில் பயணிக்கலாம்.
உணவு மற்றும் பயண காப்புறுதி அடங்கிய மதிப்பு தொகுப்பு டிக்கெட் பதிவுக்கு 10% கழிவையும் ஏர் ஆசியா வழங்குகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது முதல் உலக அளவில் கோடிக்கணக்கான பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்றுள்ளது.
உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமானம் என்ற முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறது.
அனைத்து வாழ்க்கை நிலையிலும் உள்ள மக்களை கொண்டு செல்லும் விமானம் என்பதை ஏர் ஆசியா தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
பாஹ்ராயின் மற்றும் லண்டன் நகர்களுக்கான பயண காலம் 26 ஜூன் 2026 முதல் 27 மார்ச் 2027 வரையாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular