
சிறந்த மலிவு கட்டண விமான நிறுவனம் விருதை வென்றதை தொடங்கி இவ்வாண்டு தொடக்கத்தை வெற்றியுடன் கால் பதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த 2025 புத்ரா பிராண்ட் விருது விழாவில் ஏர் ஆசியா வெண்கல பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தது.
இந்த விருது விழாவில் போக்குவரத்து, பயணம் மற்றும் சுற்றுலா பிரிவில் ஏர் ஆசியாவிற்கு இந்த விருது கிடைத்தது.
‘இப்பொழுது அனைவரும் சிறகடிக்கலாம்’ என்ற கோஷதிற்கு ஏற்ப மக்களின் விமான நிறுவனம் மற்றும் மலேசியாவில் பெரும்பாலான நகர்களுக்கு சிறகடிக்கும் விமான நிறுவனம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா மக்களுக்கு சிறந்த தேர்வு என்பதை இந்த விருதுக்கான கணக்கெடுப்பு காட்டுகிறது.
இந்த விருது ஏர் ஆசியாவிற்கு கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது


