Monday, November 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வெ10,000 தீபாவளி Ang Pow வழங்கிய எம்பி லிம் லிப் எங்கிற்கு நன்றி!

கோலாலம்பூர் நவ 16
தமது உடல் நலத்தை கருத்தில் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு வெ10,000 Ang Pow வழங்கிய கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கிற்கு யுவராஜ் ரவி வர்மா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து இந்த பரிசை தாமும் தமது குடும்பத்தினரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என தமது முகநூலில் அவர் பதிவேற்றம் செய்தார்.
கெப்போங் எம்பியின் இந்த உயர்ப்பண்புடைய மனதை தாமும் தமது குடும்பத்தினரும் மிகவும் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
கெப்போங் எம்பி தமது குடும்பத்தினருக்கு செய்து வரும் இந்த உதவி முதல் முறை அல்ல.
‘எனது கல்விக்கும் மற்றும் எனது Dialysis சிகிச்சைக்கும்’ கெப்போங் எம்பி தொடர்ந்து உதவி வருவதாக அவர் மனம் நெகிழ்ந்தார்.
ஒரு கண் பார்வையற்ற மாணவன் Dialysis சிகிச்சையை மேற்கொண்டு வருவது எளிதான ஒன்றல்ல என்றார் அவர்.
தமது நிலையில் உள்ள ஒருவர் இந்த சவால்களை எதிர்கொள்வது எளிதான ஒன்றல்ல. ஆனால் அந்த நேரத்தில் ஒருவர் முன்வந்து உதவும் போது, இந்த பயணத்தில் தாம் தனியாள் அல்ல என தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டார்.
‘எம்பி உங்களின் தாராள மன குணம் உங்களின் உதவியையும் தாண்டி, எனக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது’ என அவர் சொன்னார்.
‘உங்களின் இந்த பேருதவி எனது கனவை நினைவாக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்றார் அவர்.
உங்களுக்கு தாமும் தமது குடும்பத்தினரும் என்றுமே கடமைப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular