Sunday, February 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆண்டுப் பொதுக் கூட்டம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஒரு தடையல்ல – பிபிபி மகளிர் பிரிவு!

மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 72 வது ஆண்டு பொது கூட்டத்தை நடத்தவுள்ளது.

கட்சியின் முதன்மை அமைப்பு, மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி ஆகிய அனைத்து பிரிவுகளும், அந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உற்சாகமாக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, அந்த பொதுக்கூட்டத்தை பாரிசான் நேஷனல் (BN) தலைவர் மற்றும் துணை பிரதமர், டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹித் ஹமிடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளதால், இப்போது கூட்டம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எனினும், இந்தப் பணிச்சுமை பிபிபி மகளிர் அணியை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் பொங்கல் விழாவை நடத்துவதிலிருந்து தடுக்கவில்லை.

இன்று நாடு முழுவதும் இந்திய சமூகம் பொங்கல் திருநாள் கொண்டாடி வருகின்றது.

பிபிபி மகளிர் அணியின் தலைவர் புனிதா முனுசாமி கூறுகையில், பொதுக்கூட்டத் தயாரிப்புப் பணிகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு, மகளிர் அணியினருடன் இணைந்து பொங்கல் சமைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது என்றார்.

“பொங்கல் பண்டிகையை ஒன்றாகச் செய்வது போல வேறொன்றுமில்ல, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பொங்கல் என்பது செழிப்பையும், மிகுதியான மகிழ்ச்சியையும் தரும் ஒரு கொண்டாட்டம், என்றார் புனிதா.

இந்தப் பொங்கல் விழாவை பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் அவர்கள் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பிபிபி இளைஞர் அணித் தலைவர் சத்தியா சுதாகரன், பொதுச் செயலாளர் டத்தோ’ இந்தர் சிங் மற்றும் தகவல் பிரிவு தலைவர் ஸ்டீவன் அசெலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular