
செப்பாங் ஜன 15
2025 ஆசியா மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏர் ஆசியா எக்ஸ் வாடகை விமானம் ஒன்றை வழங்கி தனது ஆதரவை தந்தது.
பேங்காக்கில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கு ஜன 15 மற்றும் ஜன 27 ஆகிய தேதிகளுக்கு கோலாலம்பூர் மற்றும் பேங்காக் இடையே சுமார் 360 போட்டியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஏர் ஆசியா எக்ஸ் கொண்டு செல்கிறது.
மலேசிய
தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் இடையே ஒப்பந்தத்தின் படி ஒரு சிறப்பு வாடகை விமான மூலம் இந்த விளையாட்டுளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். மலேசிய விளையாட்டுக் குழுவினர் சௌகரியமாக பயணம் செய்ய இந்த சிறப்பு ஏற்பாடுகளை ஏர் ஆசியா எக்ஸ் செய்யதுள்ளது. பேங்காக் நகரில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிக்கு மலேசிய விளையாட்டாளர்களை கொண்டு செல்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பெஞ்யாமின் இஸ்மாயில் கூறினார்.

‘நாட்டை பிரதிநிதிக்கும் நமது வீரர்களை பறக்க செய்வது கௌரவமான ஒன்று’ என அவர் குறிப்பிட்டார்.
இந்த வீரர்களின் ஆர்வம், மன உறுதி மற்றும் திறமை நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் தேசிய விளையாட்டு துறையிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்த ஏர் ஆசியா எக்ஸ் ஆர்வம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டுப் போட்டியில் மலேசிய வீரர்கள் சிறந்த வெற்றியை ப் பெற ஏர் ஆசியா எக்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
ஏர் ஆசியா எக்ஸ் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் என அவர் உறுதியளித்தார்.


