
இந்துக்களின் பாரம்பர பண்டிகையான இந்த பொங்கல் திருநாள் நமது வாழ்க்கையில் வசந்தம் வீச இறைவனை பிரார்த்திப்போம் என கெராக்கான் கட்சியின் தேசிய உதவி தலைவர் பரமேஸ்வரன் கூறினார்.
‘தை பிறந்தாள் வழி பிறக்கும்’ என்பது போல் இந்த பொங்கல் திருநாளில் சுபிட்சம் மற்றும் வளங்கள் செழித்தோங்க வேண்டும் என்றார் அவர்.
உழவர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படும் நாள் இது. அதைப்போல் நாம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்றார் அவர்.
உலகம் முழுவதும் உள்ள இந்து பெருமக்கள் கொண்டாடும் இந்த இனிய நாளில் நாம் கருத்து வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் இந்த திருநாளை இனிதே கொண்டாடுவோம் என தமது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டார்.


