
கோலாலம்பூர் ஜன 12
பிபிபி கட்சியின் தேசிய பேராளர்கள் மாநாடு எதிர் வரும் 18 ஜனவரி 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இந்த பேராளர்கள் மாநாட்டை தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருப்பதாக பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலமோகன் கூறினார்.
தலைநகர் புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெறவருக்கும் இந்த மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து சுமார் 3,000 பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என்றார் அவர்.
இந்த மாநாட்டில் கல்வி, தேசிய ஒற்றுமை உட்பட 7 தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலை விவரம் சமூகம் மற்றும் பொருளாதார தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக நாட்டில் அனைத்து இனங்களின் கல்வி குறித்து கட்சி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சி அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.


