Friday, January 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமரின் புத்தாண்டு வாக்குறுதி கல்வி சூழலை வலுப்படுத்தும்!

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் புத்தாண்டு உறுதிமொழி நாட்டில் கல்வி சூழலை வலுப்படுத்தும் என பிகேஆர் கட்சியின் மகளிர் அணி துணைப் பொருளாளரும் அந்த அணியின் ஆட்சி குழு உறுப்பினருமான ஜே.கேரன் கஸ்தூரி கூறினார்.
நாட்டில் தாய்மொழி பள்ளிகளான தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்த அறிவிப்பானது கல்வி சூழலுக்கு பிரதமர் வழங்கும் முன்னுரிமையை காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் வெவ்வேறு பள்ளி முறைகள் மற்றும் சமூகங்கள் இருந்தபோதிலும் கல்வி சூழலை வலுப்படுத்த பிரதமர் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


சாதகமான வகுப்பறைகள், நன்கு பராமரிக்கப்படும் பள்ளி சுற்றுச்சூழல்கள், அடிப்படை வசதிகள் மாணவர்கள் நம்பிக்கையுடன் கல்வி கற்க உதவும் என அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமரின் புத்தாண்டு செய்தி 2026 ஆம் ஆண்டு ஆண்டிற்கு நல்ல உருமாற்றத்தை கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில் பிரதமரின் இந்த கனவை நனவாக்க பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் பங்கு மிக மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் நம் நாட்டு பிரதமருக்கு துணை நிற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular