Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புஷான் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் மீண்டும் நேரடி விமான சேவை!

தென் கொரியாவில் மேலும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புஷான் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
கோலாலம்பூர் மற்றும் புஷான் ஆகிய முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை மேற்கொள்ளும் ஒரே மலேசிய விமான நிறுவனம் ஏர் ஆசியா எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 17 ஜூன் 2026-ல் இந்த நேரடி விமான சேவை தொடங்குகிறது. வாரத்திற்கு 4 முறை ஏர் ஆசியா எக்ஸ் புஷான் நகருக்கு சிறகடிக்கும்.
ஏர் ஆசியா எக்ஸ் சிறகடிக்கும் 21 வது நகரம் இதுவாகும்.தென் கொரியாவில் இது இரண்டாவது நகரமாகும்.
இந்த அற்புத நகருக்கு மீண்டும் நேரடி விமான சேவை மேற்கொள்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பெஞ்யாமின் இஸ்மாயில் கூறினார்.
புஷான் நகருக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் முதலாவது மலேசிய விமான நிறுவனம் ஏர் ஆசியா எக்ஸ் என்றார் அவர்.
புஷான் பல அதிசயங்களை கொண்ட ஒரு நகரமாகும்.’


இந்த நேரடி விமான சேவை தென் கிழக்கு ஆசியா மற்றும் இதர ஆசிய நகரங்களைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சியோல் நகருக்கு அடுத்து தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரம் புஷான். இந்த கடலோர நகரம் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் புஷான் நகர மக்கள் மலேசியாவிற்கு வருகை புரிய இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு என்பதால், புஷான் நகர மக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் புஷானில் உள்ள அழகிய கடற்கரைகள், ஜாகால்ஷி மீன் சந்தை மற்றும் வண்ணங்களை கொண்ட மலையோர கிராமங்கள் மலேசியா சுற்றுப்பயணிகள் அதிகம் கவரும் என அவர் குறிப்பிட்டார்.


மேலும் இந்த நேரடி விமான சேவையின் மூலம் கோலாலம்பூர் மற்றும் புஷான் நகரங்களுக்கிடையே சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் வலுவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நேரடி சேவையை கொண்டாடும் வகையில் கோலாலம்பூர் மற்றும் புஷான் நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம்
வெ299 ஆகும்.
இப்பொழுது முதல் 18 ஜனவரி 2026-க்குள் இந்த சிறப்பு கட்டணத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular