Friday, July 31, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆலய விவகாரத்தில் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார்:பிரதமரின் பெருந்தன்மையை காட்டுகிறது!

கோலாலம்பூர் ஜூலை 31
ஆலய விவகாரத்தில் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை புண்படுத்தியிருந்தால் அந்த தவறுக்காக தம்மை மன்னிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் உரை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திடம் ஒரு பிரதமர் தமது பதவியையும் பொருட்படுத்தாமல் இப்படி கேட்டுக்கொள்வது மிகவும் அரிதான ஒன்று சென்றார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிரம்பானில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது வருத்தத்தை இந்திய சமூகத்திடம் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில் இனி வரும் காலங்களில் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரர்களை தாம் நேரடியாக கையாள போவதாக பிரதமர் அன்வாரின் உறுதிமொழி மிகவும் பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.
இனி வரும் காலங்களில் இந்திய சமூகம் எதிர் நோக்கம் பிரச்சனைகளை தாம் நேரடியாக கையாள போவதாக பிரதமரின் உறுதிமொழி இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு நற்செய்தி என்றார் அவர்.
கடந்த மூன்றரை ஆண்டுகள் பிரதமருக்கான சம்பளத்தை வாங்காமல் பதவிவகித்து வரும் இந்நாட்டின் முதல் பிரதமர் அன்வர் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இருந்த முன்னாள் பிரதமர்கள் பல ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவியை வகித்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி ஊழல் காரணமாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அதே போல் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது ஆற்றின் போது நடந்த ஜானா விபாவா ஊழல் காரணமாக தற்போது நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கி வருகிறார்.

அடுத்த கட்டமாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி தமது சகாவிடம் பல கோடி வெள்ளி மற்றும் தங்க கட்டிகள் இருந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நாட்டிற்கு அடுத்த தகுதியான பிரதமர் யார் என்பது இந்நாட்டு மக்களின் கேள்வியாகும்.
நமது நாட்டிற்கு அடுத்த பிரதமர் யார் என்பது அனைவரின் கேள்விக்குறியே!
அடுத்த பிரதமர் பதவிக்கு பாக்காத்தான் ஹராப்பானில் அன்வாரைத் தவிர வேறு வேட்பாளர் யாரும் இல்லை என்பதே உண்மை.

அதே வேளையில் தேசிய முன்னணியில் ஒரு பிரதமர் வேட்பாளரை முன்வைக்க அந்த கூட்டணி தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
நாளை ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலிலின் முடிவு இந்த கேள்விக்கு பதில் தரும் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular