
-டான்ஸ்ரீ முரளியின்
ரொம்பின் ஜூலை 31
நாளை ஆகஸ்டு 1 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெராம் பாடாங் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணனை இந்த தொகுதி வாக்காளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை விட இந்த தொகுதியில் அதிகமான சேவைகளை சஞ்சீவன் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில் உள்ள மலாய்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கு பாகுபாடின்றி இவர் உதவி வருவதாக அவர் சொன்னார்.
ஜெராம் பாடாங் தொகுதி மக்களுக்கு சஞ்சீவினை விட ஒரு சிறந்த பிரதிநிதி கிடைக்காது என இங்குள்ள மக்களுக்கு அவர் நினைவூட்டினார்.
நாளைய தேர்தலில் உங்களின் பிரதிநிதியாக இவரை இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அவர்.
அண்மையில் இங்கு மலாய் சமூகத்தை சேர்ந்த சுமார் 10 பேருக்கு தமது சொந்த செலவில் புனித யாத்திரைக்கு இவர் அனுப்பி வைத்துள்ளார் என்பது நமக்கு பெருமையை தருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தொழில் அதிபர் என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு அதிக உதவிகளை இவர் செய்து வந்துள்ளார்.
இந்த தொகுதி மக்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் குரல் கொடுக்க சஞ்சீவன் பொருத்தமான பிரதிநிதி என முன்னாள் பிரதமருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மணிவண்ணன் போட்டியிடுகிறார்.


