
பாலோ ஜூலை 31
நாளை ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிபிபி கட்சியின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோக பாலா வலியுறுத்தினார்.
நாளை சனிக்கிழமை நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பிபிபி தேர்தல் குழுவினர் வீடு வீடாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று இங்கு தேசிய முன்னணியின் பாலோ தொகுதி வேட்பாளர் லீஸா முகமட் யாசினுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தேசிய முன்னணியின் பங்காளி கட்சியான பிபிபி, இந்த தேர்தலில் தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை கைப்பற்ற முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இம் மாநில மக்களுக்கு தேசிய முன்னணியால் தான் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில மக்கள் எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பிபிபி கட்சியின் உதவி தலைவர் டத்தோ இன்டர் சிங், நெகிரி செம்பிலான் மாநில தலைவர் டத்தோ ஆறுமுகம், மாநில செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி புனிதா, சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட கட்சியின் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


