Friday, March 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தலைமை ஏற்க பாஸ் பொருத்தமான கட்சி

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தலைமை ஏற்க பாஸ் பொருத்தமான கட்சி என அக்கட்சியின் ஆதரவு பேரவையின் திரங்கானு மாநிலத் தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
எதிர் கட்சி கூட்டணிக்கு பாஸ் தலைமை ஏற்க இது தான் சரியான தருணம் என திரங்கானு மாநில மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாதவர்கள் விவகார பிரிவின் சிறப்பு அதிகாரியுமான அவர் சொன்னார்.
எதிர் கட்சி கூட்டணியில் கொள்கைகளை நிலை நாட்டுவதில் பாஸ் சிறந்து விளங்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் அரசியல் கொந்தளிப்பு தருணங்களில் அவற்றை கையாளுவதில் பாஸ் தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணியில் பாஸ் அதிகமான நாடாளுமன்ற இடங்களை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் விவகாரங்களை கையாள்வதில் பாஸ் மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அரசியல் சுமை இல்லாமல் தனது திறமையான தலைமைத்துவத்தை பாஸ் வெளிப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு பாஸ் தலைமை ஏற்பதின் வழி எதிர்க்கட்சி கூட்டணி வலிமையுடன் விளங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களுக்கு பாஸ் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த எதிர்காலம் உண்டு என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவருமான அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular