Monday, November 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வசதி குறைந்த குடும்பங்களுக்கு முதல் ஜெயம் குழுவினர் தீபாவளி பலகாரங்களை வழங்கி மகிழ்ச்சியையும், பண்டிகை உற்சாகத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

கிள்ளான் நவ 16
இங்குள்ள புக்கிட் ராஜா அடுக்குமாடி வீடுகளில் உள்ள சுமார் 20 இந்திய குடும்பங்களுக்கு முதல் ஜெயம் குழுவினர் தீபாவளி பலகாரங்களை வழங்கினர்.
நடந்து முடிந்த தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல் ஜெயம் குழுவின் நிறுவனர் மு.ஜீவனேஸ்வரி அந்த குடும்பங்களுக்கு தீபாவளி பலகாரங்களை எடுத்து வழங்கினார்.

இந்த உதவிக்கு முதல் ஜெயம் குழுவைச் சார்ந்த தீனா முழுமையான ஆதரவை வழங்கினார்.
இது மட்டுமின்றி கிள்ளான் வட்டாரத்தை சாய் பாபா முதியோர் இல்லம், அன்பே சிவம் இல்லம்,டைமன் கிட்ஸ் ஹோம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் ஆகியவற்றிற்கு துணிமணிகள் மற்றும் தீபாவளி பலகாரங்கள் வழங்கப்பட்டதாக ஜீவனேஸ்வரி கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் ஜெயம் குழு, கோவிட் 19 தொற்றின் போது, புக்கிட் ராஜா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களை வழங்கி வந்ததாக அவர் சொன்னார்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகை காலங்களில், வசதி குறைந்தவர்களுக்கு தொடர்ந்து முதல் ஜெயம் குழு உதவி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் வசதி குறைந்தவர்களை மறந்து விடக்கூடாது என்ற நோக்கில், தங்கள் இந்த பணிகளை செய்து வருவதாக அவர் சொன்னார்.
வசதி குறைந்தவர்களுக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular