Monday, November 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கார்ல்ஸ்பெர்க் கோல்ஃப் கிளாசிக் போட்டி 33 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது – BestWithCarlsberg தருணங்கள் தொடர்கின்றன!

ஷா ஆலாம், நவ 16

மலேசியாவின் நீண்டகாலமாக நடைபெற்று வரும் அமெச்சூர் கோல்ஃப் போட்டியின் 33ஆவது பதிப்பு, கோத்தா பெர்மாய் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் நிறைவடைந்தது.

ஷா ஆலம், நவம்பர் 13, 2026 – 33 பதிப்புகள், ஆயிரக்கணக்கான கோல்ஃப் வீரர்கள் மற்றும் எண்ணற்ற மறக்க முடியாத தருணங்கள் எனத் தொடர்ந்து, கார்ல்ஸ்பெர்க் கோல்ஃப் கிளாசிக் (CGC) போட்டி நாடு முழுவதும் உள்ள கோல்ஃப் வீரர்களை ஒன்றிணைத்து, ஆரோக்கியமான போட்டி உணர்வையும் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியான அனுபவங்களையும் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு மலேசியாவின் நீண்டகாலமாக நடைபெற்று வரும் அமெச்சூர் கோல்ஃப் போட்டியில், நாடு முழுவதும் 29 தகுதிச் சுற்றுகள் நடத்தப்பட்டன. அவற்றில் 3,300க்கும் மேற்பட்ட கோல்ஃப் வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டித் தொடரின் முழுக் காலப்பகுதியிலும் RM2.7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக, கோத்தா பெர்மாய் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற தேசிய இறுதிப் போட்டியில், தகுதி பெற்ற வீரர்கள் 2026ஆம் ஆண்டுக்கான கிராஸ் (Gross) மற்றும் நெட் (Nett) சாம்பியன் பட்டங்களுக்காகப் போட்டியிட்டனர்.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் விற்பனை இயக்குநர் கேரி டான் கூறுகையில்:

“தீவிர கோல்ஃப் விளையாட்டு ஆர்வலரான எனக்கு, கார்ல்ஸ்பெர்க்கின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சிறந்த கோல்ஃப் விளையாட்டு, உலகின் மிகச் சிறந்த பீர் எனப் போற்றப்படும் கார்ல்ஸ்பெர்க் மற்றும் ஒவ்வொரு தருணத்தையும் #BestWithCarlsberg ஆக்கும் மக்களை ஒன்றிணைப்பதைவிடச் சிறந்த வழி வேறில்லை.

“கோல்ஃப் வீரர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் பங்கேற்கும் கிளப்புகள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுதான், பல ஆண்டுகளாக கார்ல்ஸ்பெர்க் கோல்ஃப் கிளாசிக் போட்டியைச் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என்றார்.

அவர் கூறுகையில்:

“நாடு முழுவதும் நடைபெற்ற தகுதிச் சுற்றுகள் மூலம் பல்வேறு கோல்ஃப் வீரர்களை ஒன்றிணைப்பதே இந்தப் போட்டியின் சிறப்பம்சமாகும். போட்டியில் பங்கேற்பதற்காக வருகிறோம். ஆனால், சக வீரர்களுடனான நட்பு, அங்குள்ள உற்சாகமான சூழல் மற்றும் விளையாட்டு மைதானத்திலும் அதற்கு வெளியேயும் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியான தருணங்கள்தான் இந்த அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.

“தேசிய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த அனுபவத்தை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது,” என்றார்.

போட்டிகளுக்கு அப்பால், பங்கேற்ற கோல்ஃப் கிளப்புகளில் வீரர்கள் கார்ல்ஸ்பெர்க் பானங்களையும் ரசித்தனர். கோல்ஃப் மைதானத்தில் விளையாடும்போதும், போட்டிக்குப் பின்னர் சக வீரர்களுடன் உரையாடி மகிழும்போதும், குளிர்ந்த கார்ல்ஸ்பெர்க் பானம் அவர்களின் ஒன்றுகூடல் அனுபவத்தை மேலும் சிறப்பித்தது.

தேசிய இறுதிப் போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஆட்டத்தின் போது ஒரே அடியில் பந்தை குழிக்குள் செலுத்தும் (Hole-in-One) வீரர்களுக்குப் பரிசாக ஆட்டோ பவேரியா (BMW) நிறுவனம் இரண்டு BMW 320i கார்களை வழங்கியது. இதனால், ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் விளையாடும் உற்சாகம் வீரர்களிடையே அதிகரித்தது.

மேலும், adidas, TaylorMade, Garmin, Vespa மற்றும் Le Botanical ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிக்கு ஆதரவளித்து, போட்டித் தொடர் முழுவதும் வீரர்களுக்குப் பல்வேறு பரிசுகளையும் சிறப்பு அனுபவங்களையும் வழங்கின.

கோத்தா பெர்மாய் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் இறுதி ஆட்டம் நிறைவடைந்ததையடுத்து, 33ஆவது கார்ல்ஸ்பெர்க் கோல்ஃப் கிளாசிக் போட்டி மற்றுமொரு வெற்றிகரமான பருவத்தை நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் கோல்ஃப் விளையாட்டு, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிய இப்போட்டி, மேலும் பல #BestWithCarlsberg நினைவுகளைப் பதிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular