
மாடலிங் துறையில் ஈடுபட வேண்டும் என்ற தமது நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டதாக ஜொகூர் பாருவை சேர்ந்த நளினி குப்புசாமி கூறினார்.
இந்த மாடலிங் துறையில் ஈடுபட வேண்டும் என்று தமது ஆசைக்கு தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்து வந்துள்ளதாக சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணி புரியும் அவர் குறிப்பிட்டார்.
‘எங்களது குடும்பத்தில் இந்த மாடலிங் துறையில் ஈடுபடும் முதல் பெண்மணி நான் என்பதால், எந்தன் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்துள்ளனர்’ என அலை ஓசை ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.
‘சிங்கப்பூரில் யூ டெக் என்ற ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து வருகிறேன்.அதே வேளையில் ஜொகூர் பாருவில் நான் ஒரு ஒப்பனை கலைஞராக இருப்பதோடு, ‘நள்ளிஸ் கிச்சேன்’ புட்ஸ் கேட்டரிங் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன்’
என்றார் அவர்.
முதல் முறையாக 2021-ல் சிங்கப்பூரில் நடந்த அழகு ராணி போட்டியல் நான் பங்கு பெற்றேன்.
பிறகு பல நிகழ்ச்சிகளில் பிரமுகராக மற்றும் நீதிபதியாக பங்கு பெற்று எனது அனுபவத்தை நான் வளர்த்துக் கொண்டேன்.
2025 ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் எங்களின் மாடலிங் குழு அங்கு நடந்த போட்டியில் பங்கு பெற்றது. அந்தப் போட்டியில் எங்களுக்கு சாம்பியன் விருது கிடைத்தது. இந்த விருது எங்கள் குழுவிற்கு பெரும் உற்சாகத்தை தந்தது என்று தான் கூற வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் கிள்ளானில் மஹாடிக்கா புரொடக்க்ஷன் ஏற்பாடு செய்த Fashion In Frame Int 2025 அழகு ராணி போட்டியில் நான் கலந்து கொண்டேன்.
இந்த நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பல விருதுகள் தமக்கு கிடைத்ததாக அவர் பெருமிதம் கொண்டார்.

அதே வேளையில் L’Umiere INTERNATIONAL நிறுவனத்தின் உரிமையாளர் மேடம் ஜஸ்டினா ஏற்பாடு செய்த பல மாடல் அழகி போட்டிகளில் பங்கு பெற்று அதிக அனுபவத்தை தாம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இன்னும் பல அனைத்துலக மாடல் அழகி போட்டிகளில் பங்கு பெறுவதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக நமது இந்திய பெண்மணிகள் மாடல் அழகி துறையில் பங்கு பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தத் துறை நமது இந்திய பெண்மணிகளுக்கு ஒரு பெருமையை சேர்க்கும் என்றார் அவர்.
இவ்வேளையில் தமது குடும்ப உறுப்பினர்கள் காளியப்பன் கண்ணன், ராகவேந்திரன், பவித்ரன், லலிதா, ஜேன், ஷாரனி மற்றும் லேஸ்வென் அனைவருக்கும் இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக நளினி குறிப்பிட்டார்.


